Tuesday, September 13, 2011

நன்னூல் எழுத்ததிகாரம் எழுத்தியல் எழுத்திலக்ககணத்தின் பகுதி

நன்னூல்-எழுத்ததிகாரம்-எழுத்தியல்-எழுத்திலக்ககணத்தின் பகுதி
"எண், பெயிர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை
முதல், ஈறு, இடைநிலை, போலி, என்றா 
பதம், புணர்பு எனப்பன்    னிருபாற் றதுவே." 

எழுத்தின் எண்ணும் (எண்ணிக்கையும்) பெயரும் முறையும்  பிறப்பும் வடிவமும் மாத்திரையும் முதல்நிலையும் கடைநிலையும் இடைநிலையும் போலியும் பதமும் புணர்ச்சியும் எனப் பன்னிரண்டு வகையினை உடையது எழுத்திலக்ககணம்.

Thursday, December 9, 2010

கல்வெட்டு சிற்பத்தில் பல்லவர்-சாளுக்கியர் வெறுப்பு

கல்வெட்டு சிற்பத்தில் பல்லவர்-சாளுக்கியர் வெறுப்பு

காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்ட பல்லவர்கள், கி.பி 4 நூற்றாண்டின் பிற்பாதியில், சிறந்த கோவில்களை அமைத்தனர். திராவிடக் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே உருப்பெற்றது. கட்களுக்கு உயிர் கொடுத்தனர்.
மகேந்திரவர்மன் (571 – 630), அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் (630 – 668) பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். கட்டிட கலைக்கு சான்றாக விளங்குவது மல்லை, வைதீஸ்வரன் கோவில், கைலாசநாதர் கோவில், மற்றும் பல.

சாளுக்கியர் என்பவர்கள் இந்தியாவின் அரச வம்சம் ஒன்றைச் சேர்ந்தவர்கள். கி.பி. 6--12 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தெற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டு வந்தனர். சாளுக்கிய அரசர்களில் சிறந்த அரசனானவன், இரண்டாம் புலிகேசி (கி.பி. 610--642). இவன் காலத்தில், தெற்கே பல்லவ நாட்டின் வடக்கு எல்லை வரை விரிவடைந்திருந்தது சாளுக்கியப் பேரரசு.


சாளுக்கிய சின்னம்
சாளுக்கிய சின்னம்



ஆனாலும், நரசிம்மவர்ம பல்லவன், புலிகேசியைத் தோற்கடித்து அவன் தலைநகரான வாதாபியை (642 கி.பி.) சிறிது காலம் ஆக்கிரமித்திருந்தான். பல்லவர் சாளுக்கியரை தோற்கடித்ததன் காரணமாக பல்லவ கல்வெட்டில் சாளுக்கிய சின்னமான குல தெய்வமான காட்டு பன்றியை தன் தலை கவிழ்ந்து நிற்ப்பது போல் ஒரு சிலையை செதுக்கினர்.

பன்றி தலை கவிழ்ந்து நிற்ப்பது...
பின்பு சாளுக்கியர்கள் அதை உடைத்து...
பின் வந்த பல்லவ தோன்றல்கள் அச்சிலையை சரி செய்து...


தலை கவிழ்ந்த சாளுக்கிய சின்னம்

பின்பு


இரண்டாம் புலிகேசிக்குப் பின், உட் பூசல்களால் சாளுக்கியர் சிறிது காலம் வீழ்ச்சியுற்று இருந்தனர். இரண்டாம் விக்கிரமாதித்தனின் (733 – 744 கி.பி.) காலத்தில் மீண்டும் முன்னணிக்கு வந்தனர். இவன் இரண்டாம் நந்திவர்ம பல்லவனைத் தோற்கடித்து அவன் தலைநகரமான காஞ்சியையும் கைப்பற்றினான் (732–796 கி.பி.). அப்போது, மல்லையில் உள்ள கல்வெட்டுல், தங்கள் குல சின்னமான தெய்வமான காட்டு பன்றியை தன் தலை கவிழ்ந்து நிற்ப்பது போல் உள்ள சிலையை கண்டு கோபம் கொண்டு அச்சிலையை உடைத்தனர், சாளுக்கியர்கள் . அதுமட்டும் இன்றி அர்ஜுனன் தவம் சிற்பத்தில் இருக்கும் மாமல்லன், மற்றும் அவருக்கு முன் இருந்த இரண்டு அரசர்கள் சிலையில் உள்ள தலைகல்லை வெட்டி உடைத்தனர், சாளுக்கியர்கள்.